இன்ஜி., மாணவர்களுக்கு அண்ணா பல்கலை புது வசதி
இன்ஜி., மாணவர்களுக்கு அண்ணா பல்கலை புது வசதி
இன்ஜி., மாணவர்களுக்கு அண்ணா பல்கலை புது வசதி
ADDED : ஜன 23, 2024 05:20 AM
சென்னை : இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடம் நடத்துவதற்கு, ஆண்ட்ராய்டு டிஜிட்டல் பலகை வாங்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலையின் வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களுடன் ஆன்லைன் வழியில் உரையாடி பாடம் நடத்துவதற்கான, டிஜிட்டல் பலகைகள் வாங்க பல்கலை முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 45 டிஜிட்டல் வெண் பலகைகள் வாங்கப்பட உள்ளன.
இவற்றில், ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு, நவீன ஏ.ஐ., தொழில்நுட்பத்தை புகுத்தி பாடம் நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
இதில், 8 ஜி.பி., ரேம் மற்றும் 64 ஜி.பி., ஸ்டோரேஜ் வசதியுடன், ரிமோட் ஸ்கிரீன் ஷேரிங், வைபை, வீடியோ ரெக்கார்டிங், ஸ்பிலிட் ஸ்கிரீன், ஸ்கிரீன் லாக், பேச்சை எழுத்தாக மாற்றுவது என, நவீன வசதிகள் உள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


