கைது நடவடிக்கையால் எங்களை முடக்கிவிட முடியாது: முதல்வருக்கு அண்ணாமலை பதில்
கைது நடவடிக்கையால் எங்களை முடக்கிவிட முடியாது: முதல்வருக்கு அண்ணாமலை பதில்
கைது நடவடிக்கையால் எங்களை முடக்கிவிட முடியாது: முதல்வருக்கு அண்ணாமலை பதில்
ADDED : மார் 17, 2025 06:37 PM

சென்னை: உங்கள் கைது நடவடிக்கையால் எங்களை முடக்கிவிட முடியாது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதில் கூறி உள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த முறைகேட்டை கண்டித்து, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ., போராட்டம் நடத்தும் என்று அறிவித்தது. ஆனால் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
இந் நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்ல முயன்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அண்ணாமலை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டு இருக்கிறார்.தொடர்ந்து அவர் தமது பதிவில் கூறியிருப்பதாவது;
ரூ. 1,000 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ள டாஸ்மாக் ஊழலின் A1 குற்றவாளி ஸ்டாலின் கீழ் செயல்படும் தி.மு.க., காவல்துறை, தமிழக பா.ஜ.,வின் இன்றைய டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தை எப்படியாவது முடக்கவேண்டும் என்று படாத பாடுபடுகிறது.
முதல்வர் அவர்களே, உங்கள் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது. உங்கள் ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த அண்ணாமலை, குறிப்பிட்ட நேரம் கடந்தும் விடுதலை செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்தியதாக குற்றச்சாட்டி போலீசாருடன் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.