ADDED : டிச 04, 2025 05:38 AM

சென்னை: தமிழகத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை பொது தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, மாவட்ட வருவாய் அலுவலர், துணை கலெக்டர் அளவி லான அதிகாரிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


