ஹிந்து கல்லுாரி பழைய மாணவர் சங்க விழாவில் வி.ஐ.பி.,களுக்கு விருது
ஹிந்து கல்லுாரி பழைய மாணவர் சங்க விழாவில் வி.ஐ.பி.,களுக்கு விருது
ஹிந்து கல்லுாரி பழைய மாணவர் சங்க விழாவில் வி.ஐ.பி.,களுக்கு விருது
ADDED : செப் 24, 2025 12:18 AM
புதுடில்லி:புதுடில்லி ஹிந்து கல்லுாரியின் முன்னாள் மாணவர்களான அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, சினிமா தயாரிப்பாளர் இம்தியாஸ் அலி மற்றும் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் நாயர் ஆகியோர், கல்லூரியின் 20வது விருது வழங்கும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
டில்லி பல்கலை உறுப்புக் கல்லுாரியான ஹிந்து கல்லுாரியின் பழைய மாணவர் சங்க ஆண்டு விழா, இந்தியா ஹெபிடே ட் சென்டரில் நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
கல்லுாரியின் முன்னாள் மாணவரான மூத்த வழக்கறிஞர் ராஜிவ் நாயருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, அருணாச்சலப் பிரதேச முதலவர் பெமா காண்டு மற்றும் சினிமா தயாரிப்பாளர் இம்தியாஸ் அலி ஆகியோர் சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அருணாச்சலப் பிரதேச வருகையை முன்னிட்டு, பெமா காண்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவர் சார்பில் அருணாச்சலப் பிரதேச வனக் கழக தலைவர் நலோங் மிஸ், விருதை பெற்றுக் கொண்டார்.
நீதிபதி அஜய் திக்பால், சமீர் சின்ஹா, வந்தனா குர்னானி, விவேக் குமார், ஜி.வி. ராவ், ராஜிவ் சிங், அஜய் வர்மா, முக்தேஷ் பர்தேஷி, மற்றும் இளம் சாதனையாளராக அங்கீகரிக்கப்பட்ட சாகேத் குமார் ஆகிய முன்னாள் மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
ஹிந்து கல்லுாரி பழைய மாணவர் சங்கத் தலைவர் ரவி பர்மன் நன்றி கூறினார்.