திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை

திருப்பரங்குன்றம் மலை என அழைக்கின்றனர்.
அப்போது கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: ஹிந்து அமைப்பு 'ஸ்கந்த மலை', முஸ்லிம் அமைப்பு 'சிக்கந்தர் மலை', சமண சமூகம் 'சமணர் குன்று' எனவும், உள்ளூர் மக்கள் இதை 'திருப்பரங்குன்றம் மலை' எனவும் அழைக்கின்றனர்.
மலையின் பெயரை மாற்றும் முயற்சி
சிக்கந்தர் மலை என்ற கூற்றைப் பொறுத்தவரை, 1920ல் நீதிமன்றம் மலையின் பெயர் 'திருப்பரங்குன்றம் மலை,' என திட்டவட்டமாகக் கூறியுள்ளது. வருவாய்த்துறை பதிவுகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் மலையின் பெயரில் உள்ளன. மலைக்கு 'திருப்பரங்குன்றம் மலை'என்று பெயரிடப்பட்டபோது, 'மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அரசியல் கட்சி அமைப்பு,' என தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை ஹஜரத் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில் விருந்து நடத்தப் போவதாக ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டனர். அதில் ஆடு, கோழி அறுத்து சமூக நல்லிணக்கத்திற்காக சமபந்தி விருந்து நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிச்சயமாக குறும்புத்தனமானது மற்றும் திருப்பரங்குன்றம் மலையின் பெயரை மாற்றும் முயற்சியாகும்.
புனிதத்தை பாதுகாக்கும் பக்தர்கள்
சன்னதி தெருவில் இறைச்சிக் கடை இல்லை. கோயிலிலிருந்து 300 மீட்டர் தொலைவில் இறைச்சிக் கடை இல்லை. 300 மீட்டருக்கு மேல் பிராய்லர் கோழிக்கடை இல்லை. உண்மையில் திருப்பரங்குன்றத்திலுள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் அசைவ உணவு சமைப்பதை அனுமதிப்பதில்லை. இந்த உண்மைகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் புனிதத்தை பக்தர்கள் எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதைக் கூறுகின்றன. கந்துாரி விலங்கு பலி நடைமுறைக்கு எதிர்ப்பு உள்ளது. ஹிந்து மதத்திலும் விலங்கு பலியிடும் நடைமுறை இருப்பதாக ஒரு எதிர் வாதம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அழகர்கோவில் ஒரு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டது. நிச்சயமாக அது பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில்தான் நிலவுகிறது; அழகர்கோவிலில் அல்ல. அழகர் தெய்வத்திற்கு அல்ல. மேலும் பழமுதிர்ச்சோலையிலுள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கும் அல்ல. அவ்வாதம் ஏற்புடையதல்ல.
குறும்பு மற்றும் தீங்கிழைக்கும் செயல்
சிக்கந்தர் தர்காவில் ஆடு மற்றும் கோழியை பலியிடுவது குறித்து வெளியிட்ட துண்டுப்பிரசுரம் நிச்சயமாக குறும்பு மற்றும் தீங்கிழைக்கும் செயல் என இந்நீதிமன்றம் கருதுகிறது. இது சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும். தர்காவிற்கு வந்தவர்கள் சமண குகைகளில் பச்சை வண்ணம் பூசியுள்ளனர். காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழி என குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளிலும் பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
மாறுபட்ட கருத்து அடிப்படையில் இரு நீதிபதிகளும் உத்தரவு பிறப்பித்ததால் தகுந்த உத்தரவிற்காக இதை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். தலைமை நீதிபதியின் பரிந்துரைப்படி மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
விலங்குகளை பலியிடும் நடைமுறை
மதுரை மாவட்ட நீதிமன்றம்,'நெல்லித்தோப்பு மற்றும் தர்கா பகுதியைத் தவிர முழு மலையும் கோயிலுக்குச் சொந்தமானது,' என 1920 ல் சிவில் வழக்கில் உறுதி செய்துள்ளது. அத்தீர்ப்பில் விலங்குகள் பலியிடப்பட்டதற்கான குறிப்பு இல்லை.காசி விஸ்வநாதர் கோயிலும் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் ஆகம கோயில்கள். எப்போதும் அங்கு விலங்கு பலியிடப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. விலங்குகளை பலியிடும் நடைமுறை 2024 ல் மட்டுமே துவங்கியது. அதற்கு கோயில் நிர்வாகம் மற்றும் ஹிந்து பக்தர்களால் எதிர்ப்பு எழுந்தது என்றார்.
கிராம சபையால் ஆட்சேபம்
கோயில் தரப்பில் வழக்கறிஞர் மனோகர் கூறியதாவது: மலைக்கு பாதிப்பு ஏற்படுத்த தர்கா நிர்வாகம் அல்லது முஸ்லிம்கள் முயற்சி மேற்கொண்ட போதெல்லாம், கிராம சபையால் ஆட்சேபணைகள் எழுப்பப்பட்டுள்ளன. கலெக்டர் மற்றும் போலீசாரிடம் கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. ஜன., 30ல் நடந்த அமைதிக் குழு கூட்டத்திற்கு, கோயிலின் அறங்காவலர்கள் அல்லது செயல் அலுவலர் அழைக்கப்படவில்லை.
விலங்குகளை பலியிட சமைக்க அனுமதிக்க முடியாது
ஜன., 30 ல் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. அதற்கு தர்கா நிர்வாகமோ அல்லது கோயில் நிர்வாகமோ அழைக்கப்படவில்லை. அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். சட்டம்- ஒழுங்கு பிரச்னையைத் தடுப்பதற்காக மட்டுமே அத்தகைய கூட்டம் நடந்தபட்டது தெளிவாகிறது. விலங்குகள் பலியிடுவது தொடர்பான பிரச்னையை முடிவு செய்ய அல்ல. அந்த அமைதிக் குழுவின் அறிக்கையை நம்ப முடியாது.


