பைக்குகள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி
ADDED : பிப் 12, 2024 06:18 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ், 29; தேங்காய் வியாபாரி. சூளகிரி செல்ல கட்டிகானப்பள்ளியில் இருந்து, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தார்.
அனாசந்திரத்தைச் சேர்ந்த பெயின்டர் திம்மராஜ், 44, பீளாளம் கிராமத்திலிருந்து, வி.மாதேப்பள்ளி கிராமத்துக்கு, 'பஜாஜ் விக்ராந்த்' பைக்கில் சென்றார். சூளகிரி - கும்பளம் சாலையில் தொட்டூர் கிராமத்தில், கங்கம்மா கோவில் அருகே மாலை, 6:30 மணிக்கு வந்தபோது, இருவரின் பைக்குகளும் நேருக்கு நேர் மோதின.
தலையில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, சூளகிரி அவசர சிகிச்சை மையத்துக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.