நெரிசலில் சிக்கி திணறிய பேருந்துகள்
நெரிசலில் சிக்கி திணறிய பேருந்துகள்
நெரிசலில் சிக்கி திணறிய பேருந்துகள்

தாமதம் ஏன்
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கிளாம்பாக்கத்தில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டப்படி அரசு பஸ்கள் இயக்குகிறோம். இருப்பினும், மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அரசு பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்தன. இதனால், கிளாம்பாக்கத்தில் இருந்து இரவு நேரத்தில் பஸ்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட முன்பதிவு இல்லாத பஸ்கள் தாமதம் இன்றி இயக்கப்பட்டன.
சரியான திட்டமிடல் இல்லை
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல போதிய அளவில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், பஸ் இயக்கத்திலும், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்திருந்த பயணியர், இரண்டு மணிநேரம் வரை காத்திருந்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்கள் தடையின்றி வெளியே செல்லவும், உள்ளே வர போதிய ஏற்பாடுகளும், நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும்.


