ADDED : செப் 23, 2025 11:52 PM
சென்னை:இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனமான ஐ.சி.ஏ.ஐ., அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள, பட்டய கணக்காளர் தேர்வுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஐ.சி.ஏ.ஐ., ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, பட்டய கணக்காளர் எனும், சி.ஏ., பணிக்கான தேர்வை நடத்துகிறது.
அடிப்படை, இடைநிலை, இறுதி என, மூன்று நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்வு எழுத விரும்புவோர், உரிய கட்டணத்தை செலுத்தி, eservices.icai.org இணையதளம் வாயிலாக, நவ., 3 முதல் 16 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு குறித்த விபரங்கள் இணையதளத்தில் உள்ளன.