வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரணம் தர வழக்கு
வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரணம் தர வழக்கு
வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரணம் தர வழக்கு
ADDED : ஜன 10, 2024 06:53 AM
மதுரை : துாத்துக்குடி எழிலன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். போதிய உணவு, உடைகள், மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். இதை பேரிடராக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. நிவாரண உதவிகள் மக்களுக்கு சென்றடையவில்லை. பேரிடராக அறிவிக்க வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் ரூ.6000 ஐ ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


