"சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட்" - முதல்வர் ஸ்டாலின்
"சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட்" - முதல்வர் ஸ்டாலின்
"சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட்" - முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூன் 16, 2024 12:38 PM

சென்னை: ‛‛ சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான ‛நீட்' தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‛நீட்' தேர்வை சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள், அதன் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு நாம் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை ‛நீட்' பறிக்கிறது.
தேசிய தேர்வு முகமையை, மத்திய கல்வித்துறை அமைச்சர் பாதுகாக்கும் போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் வேறு மாதிரியான காட்சிகளை காட்டுகிறது. நீட் முறைகேடு தொடர்பாக குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தகுதியின் அளவாக கருதப்படும் நீட் தேர்வு சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் தன்னை வெளிப்படுத்தி உள்ளது. மாணவர் விரோத, சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.