சென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்
சென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்
சென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்

சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக , தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த விமானங்கள் நிலைமை சீரடைந்ததும் தரையிறங்கின.
தலைநகர் சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மாலை நேரத்தில் சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறி திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. நகரின் மைய பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் போக்குவரத்தும் அவ்வப்போது முடங்கியது.
இந் நிலையில் மழை எதிரொலியாக நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை வரவேண்டிய விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் காணப்பட்டது. டில்லி, பாட்னா, பெங்களூரு, கோவை, துர்க்காபூர், இந்தூர், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 8 இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை உருவானது.
இதையடுத்து, இந்த 8 விமானங்களும் கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் அதிகமாக வானில் வட்டமடித்த படியே இருந்தன. காற்றின் வேகம், கனமழை, ஓடுதள ஈரத்தன்மையில் மாறுபாடு ஆகிய காரணிகளால் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிறகு நிலைமை சீரடைந்ததும் அனைத்து விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின.