Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

UPDATED : செப் 22, 2025 07:52 AMADDED : செப் 22, 2025 01:29 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''சிவில் சர்வீசஸ் அதிகாரி கள், நேர்மையுடன், அரசியல் சார்பற்று பணியாற்ற வேண்டும்,'' என, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

சென்னை அண்ணாநகரில், 'கிங் மேக்கர்ஸ்' ஐ.ஏ.எஸ்., அகாடமியின், 12வது ஆண்டு விழா மற்றும் புதிய வளாகம் திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று, புதிய வளாகத்தை திறந்து வைத்து பேசியதாவது:

'கிங் மேக்கர்ஸ்' ஐ.ஏ.எஸ்., அகாடமி, 12 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதற்கு வாழ்த்து கள். இந்த அகாடமி, கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கும், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்களுக்கும், கல்வியை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

கருணை உணர்வு சிவில் சர்வீசஸ் அதிகாரி களே, நாட்டின் சிறந்த நிர்வாகத்திற்கு முதுகெலும்பாக திகழ்கின்றனர். நம் நாட்டில், எண்ணில் அடங்காத மொழிகள், கலாசாரம், சமுதாயங்கள் உள்ளன. இந்த சிறப்பு மிக்க நாட்டிற்கு சேவையாற்ற, வெறும் அறிவு மட்டும் போதாது.

கருணை உணர்வும், சேவையாற்ற வேண்டுமென்ற மனநிலையும் அவசியம். அனைத்து குடிமக்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்.

சிவில் சர்வீசஸ் அதிகாரிகள், சுதந்திரமாக, வெளிப்படை தன்மையுடன், அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும். உலகம் தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் உட்பட பல்வேறு வழிகளில், அரசு நிர்வாகத்திற்கு புதிய சவால்கள் வருகின்றன. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதே நிலை நீடிக்க, சிவில் சர்வீசஸ் அதிகாரிகளின் பங்கு அவசியம். அவர்கள் திறமையான நிர்வாகிகளாக மட்டுமின்றி, தொலைநோக்கு பார்வை உடையவர்களா செயல்பட வேண்டும்.

இங்கு பயிற்சி பெறுவோர், அதிகாரிகளாக வரும் போது, ஏழை, எளியோருக்கு நீதி கிடைக்க உழைக்க வேண்டும். சிவில் சர்வீசஸ் என்பது, அனைவருக்கும் பெரிய இலக்காக இருக்கலாம்.

சாதிக்கலாம் ஆனால், வாழ்க்கை அதை விட மிகப்பெரியது. உங்கள் பயணத்தில் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் இருக்கும் போது, எங்கும் சாதிக்கலாம்.

எனக்கு இளம் வயதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்ற கனவு இருந்தது. 1991ல் தீவிர அரசியலுக்கு சென்றேன். பின், ராஜ்யசபா எம்.பி., யானேன். பிரதமர் நரேந்திர மோடி அரசு, என்னை கவர்னராகவும், ஜனாதிபதியாகவும் உயர்த்தியது. நீங்களும், உங்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம். ஒரு செயலை செய்யும் போது, முடிவுகளை நினைத்து யோசிக்க கூடாது.

ஏனெனில், முடிவுகள் நம் கையில் இல்லை. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கான ஒன்று எப்போதும் தயாரா க இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், ''இந்த அகாடமியின் பெயர் கிங் மேக்கர்ஸ். காமராஜருக்கு, 'கிங் மேக்கர்ஸ்' என்ற பெயர் உண்டு. இந்தியாவின் மூன்று பிரதமர்களை தேர்வு செய்திருக்கிறார்.

''நீங்கள் அனைவரும், காமராஜரின் நேர்மை, எளிமை, துாய்மையை கடைப்பி டிக்க வேண்டும்,'' என்றார்.

விழாவில், கிங்மேக்கர்ஸ் இயக்குநர்கள் பூமிநாதன், சத்தியாஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் பங் கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us