Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!

Latest Tamil News
சென்னை: திட்டங்களுக்கு ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பெயர் வைப்பது, கீழடி அறிக்கை போன்றவற்றிற்கு பதில் வருமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

ஊழல்வாதிகள் பாஜவின் கூட்டணிக்கு வந்தபின்பு வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி?

நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

மத்திய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

பாஜ தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை ஆதரிப்பது ஏன்?

இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக் கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?

கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?

இவ்வாறு தமது பதிவில் முதல்வர் ஸ்டாலின் கேள்விகளை எழுப்பி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us