தொல் பொருட்கள் மாயமானதாக அதிகாரி புகாரால் சர்ச்சை; அரசியல்வாதி போல் பேசுவதாக அறிஞர்கள் கொதிப்பு
தொல் பொருட்கள் மாயமானதாக அதிகாரி புகாரால் சர்ச்சை; அரசியல்வாதி போல் பேசுவதாக அறிஞர்கள் கொதிப்பு
தொல் பொருட்கள் மாயமானதாக அதிகாரி புகாரால் சர்ச்சை; அரசியல்வாதி போல் பேசுவதாக அறிஞர்கள் கொதிப்பு

அதிர்ச்சி
இது, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் கலாசார, அரசியல் போராக வெடித்துள்ளது.இந்நிலையில், மதுரையில் சில நாட்களுக்கு முன், தனியார் அமைப்பின் சார்பில் நடந்த வரலாற்று கருத்தரங்கில், அமர்நாத் ராமகிருஷ்ணன், அதிர்ச்சி தரும் வகையிலான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
யாருக்கும் தெரியாது
இது குறித்து, அவர் பேசியதாவது: சென்னை பல்கலை தொல்லியல் துறை சார்பில், 1975 - 1982 வரை காஞ்சிபுரத்தில் பல கட்டங்களாக அகழாய்வுகள் நடந்தன. ஆனால், காஞ்சிபுரம் பற்றிய செய்திகள் யாருக்கும் தெரியாது. காரணம், அகழாய்வுகள் குறித்த சிறு சிறு செய்திகள் மட்டுமே வெளிவந்துள்ளதே தவிர, முழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அதை, யாரும் இதுவரை கேட்கவில்லை. அங்கு வேலை செய்த, பேராசிரியர் குருமூர்த்தி, 'செராமிக் டிரடிஷன் ஆப் சவுத் இண்டியா' என்ற புத்தகத்தை எழுதினார்.
பயப்படவில்லை
காஞ்சிபுரம் என்பது ஒரு பவுத்த கால நகரம். இன்றைய காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில்தான் அகழாய்வு நடந்தது. அதில், பவுத்த ஸ்துாபம் வெளிப்பட்டது. அதன்மேல்தான், இன்றைய கோவில் கட்டப்பட்டு உள்ளது. அந்த பவுத்த ஸ்துாபம் பற்றிய அகழாய்வு செய்திகள் வெளியாகவில்லை. அந்த அகழாய்வு அறிக்கை வந்திருந்தால், தமிழக வரலாறு மாறி இருக்கும். காஞ்சிபுரம் அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களை, சென்னை பல்கலையில் போய் தேடிப்பார்த்தால் ஒன்றும் கிடைக்காது. காரணம், அவை மண்ணோடு மண்ணாகி விட்டன.


