38 மாவட்டங்களில் விலங்கு நல ஆர்வலர் நியமிக்க முடிவு
38 மாவட்டங்களில் விலங்கு நல ஆர்வலர் நியமிக்க முடிவு
38 மாவட்டங்களில் விலங்கு நல ஆர்வலர் நியமிக்க முடிவு
ADDED : செப் 24, 2025 08:36 PM
சென்னை:தமிழக விலங்குகள் நல வாரியத்தின் சார்பில், 38 மாவட்டங்களில், விலங்கு நல ஆர்வலர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவ்வாரியத்தை பலப்படுத்தும் நோக்குடன், மாவட்ட அளவில் விரிவாக்கம் செய்யப் படுகிறது.
அதற்காக, 38 மாவட்டங்களில், விலங்குகள் நல ஆர்வலராக கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு மாதம், 56,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில், விலங்குகள் நல ஆர்வலர்களை நியமிப்பது இதுவே முதல் முறை.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் அவைகளுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து, இவர்கள் கண்காணிப்பர்.
நாய் உட்பட பிற கால்நடைகள் மீதான தாக்குதல்கள் குறித்தும், மாவட்டங்களில் செயல்படும் விலங்குகள் வதை தடுப்புச் சங்கத்தின் பணி கள் குறித்தும் கண்காணிப்பர்.