தேசிய கல்வி கொள்கையில் அரசியல் செய்யும் 3 மாநிலங்கள்; தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
தேசிய கல்வி கொள்கையில் அரசியல் செய்யும் 3 மாநிலங்கள்; தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
தேசிய கல்வி கொள்கையில் அரசியல் செய்யும் 3 மாநிலங்கள்; தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
ADDED : மே 27, 2025 02:08 PM

புதுடில்லி: தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் 3 மாநில அரசுகள் அரசியல் செய்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தின் முதல் ஆண்டில், கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு, நவீனமயமாக்கல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய இளைஞர்களுக்கு கல்வி எப்போதும் ஒரு முக்கிய தூணாகவும், முக்கிய ஈர்ப்பாகவும் இருந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை இந்தியாவில் கற்றலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு தொலைநோக்கு திட்டமாகும். இந்த விவகாரத்தில் 3 மாநிலங்கள் அரசியல் செய்கின்றன.
5 முதல் 23 வயதுக்குட்பட்ட 30 கோடி மாணவர்களைக் கொண்ட இந்தியாவில், கல்வி சீர்திருத்தங்கள் என்பது மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய கல்விக் கொள்கையானது, தொழில்நுட்பத்தின் மூலம் பாரம்பரியத்தையும், எதிர்கால இலக்குகளையும் இணைக்கிறது. மாணவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் தேசிய கல்விக் கொள்கை, அவர்களின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.