பா.ஜ.,வில் இருந்து பேசுகின்றனர் தினகரன் தகவல்
பா.ஜ.,வில் இருந்து பேசுகின்றனர் தினகரன் தகவல்
பா.ஜ.,வில் இருந்து பேசுகின்றனர் தினகரன் தகவல்
ADDED : செப் 19, 2025 01:22 AM

சென்னை:அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் நேற்று அளித்த பேட்டி:
தே.ஜ., கூட்டணி முதல்வர் வேட்பாளர் பழனிசாமி, கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பார் என தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கூறினார்.
அதனால், அந்த கூட்டணியில் இருந்து விலகினேன். எந்த காரணத்திற்காகவும் பழனி சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது.
நாங்களும் வேண்டும், பழனிசாமியும் வேண்டும் என பா.ஜ., நினைக்கிறது. ஆனால், பழனிசாமியும், அ.ம.மு.க.வும் ஒன்றாக பயணிக்க முடியாது.
இருப்பினும், டில்லியைச் சேர்ந்த சில நலம் விரும்பிகள், அண்ணாமலை வாயிலாக, என் முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அ.ம.மு.க., ஏற்பது தற்கொலைக்கு சமம். அண்ணாமலையும், நானும், கடந்த 9ம் தேதி டில்லி செல்வதாக இருந்தது, தள்ளிப் போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.


