கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர்கள் அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்
கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர்கள் அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்
கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர்கள் அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2025 06:44 AM
சென்னை : அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும், அரசு கள்ளர் பள்ளிகளில், பல ஆண்டுகளாக காலியாக இருக்கும், ஆசிரியர் பணி இடங்களை நிரப்பாததால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மதுரை தும்மக்குண்டு கள்ளர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியர் இல்லாமல், 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் பாடத்தில், ஒன்பது மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.
அதன்பிறகும், ஆசிரியர்களை நியமிக்க, தி.மு.க., அரசு முன்வராதது, கடும் கண்டனத்துக்கு உரியது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, கலந்தாய்வு வழியே நிரப்பும் வரை, பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக, தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற கல்வித்துறையின் உத்தரவு, அரசு கள்ளர் பள்ளிகளில், நடைமுறைக்கு வரவில்லை.
அரசு கள்ளர் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், வேறு பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து, பாடம் நடத்த நிர்பந்திப்பது, அவர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துகிறது; மாணவர்களின் கல்வித்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, கள்ளர் பள்ளிகளுக்கு, போதுமான ஆசிரியர்களை, உடனடியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.