Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க.,வுக்கு தோல்வி பயம்: உறுதியாக சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!

தி.மு.க.,வுக்கு தோல்வி பயம்: உறுதியாக சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!

தி.மு.க.,வுக்கு தோல்வி பயம்: உறுதியாக சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!

தி.மு.க.,வுக்கு தோல்வி பயம்: உறுதியாக சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!

UPDATED : ஜூன் 04, 2025 01:34 PMADDED : ஜூன் 04, 2025 01:21 PM


Google News
Latest Tamil News
புதுக்கோட்டை: தி.மு.க தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால்தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர் என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.



புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

* தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், ஓ.பி.எஸ்., உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

* ஜூன் 8ம் தேதி மதுரை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளார்.

* அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை, யார் அந்த சார்? என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது.

* இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. தெளிவுபடுத்த வேண்டியது தமிழக முதல்வரின் பொறுப்பு. அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் வரவேண்டும்.

* சட்டம் ஒழுங்கு பிரச்னை மோசமாக உள்ளது. தமிழகத்தில் தான் நவீன வகையான போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறது.

* தி.மு.க தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால்தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

* காங்கிரஸோ, தி.மு.க.,வை பற்றியோ கூட்டணி பற்றிய எந்த குறையும் நாங்கள் கூறவில்லை. அப்படி இருக்கையில் முதலமைச்சர் எங்களை பார்த்து பயந்து ஏன் குறை சொல்ல வேண்டும்.

* அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது தமிழக அரசியல் களம் அதிரடியாக இருந்தது. அண்ணாமலைக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



தே.ஜ., கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் கூட்டாட்சி தான் அமையும் என்று பல்வேறு தரப்பினர் சொல்கின்றனர் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ''தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி இல்லை. வரும் காலத்தில் அது சாத்தியமா என பார்க்கலாம். தே.ஜ., கூட்டணி ஆட்சி வரும்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us