நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவிட்டும் தி.மு.க., அரசு பிடிவாதம்! தீபம் ஏற்றாததால் திருப்பரங்குன்றத்தில் தீராத பதற்றம்

தி.மு.க., அரசுக்கு குட்டு
இதைதொடர்ந்து மலைக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதை தடுக்க திருப்பரங்குன்றத்தில் அவசரம் அவசரமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை காரணம் காட்டி பாதுகாப்பு படை வீரர்களை போலீசார் தடுத்தனர்.
144 தடை உத்தரவு ரத்து
இதைதொடர்ந்து அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், காணொலியில் கலெக்டர் பிரவீன்குமார், கமிஷனர் லோகநாதனிடம் விசாரித்தார். அவர்களின் பதில்கள் ஏற்கும்படியாக இல்லாததால், இன்றிரவு (நேற்று) 7:00 மணிக்குள் மனுதாரர்(ராம ரவிகுமார்) தீபம் ஏற்ற வேண்டும். அவருக்கு கமிஷனர் லோகநாதன் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபம் ஏற்றியது குறித்து நாளை(இன்று) காலை 10:30 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.