Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விஜய் வீட்டை முற்றுகையிட்ட திமுக மாணவர் அணி!

விஜய் வீட்டை முற்றுகையிட்ட திமுக மாணவர் அணி!

விஜய் வீட்டை முற்றுகையிட்ட திமுக மாணவர் அணி!

விஜய் வீட்டை முற்றுகையிட்ட திமுக மாணவர் அணி!

ADDED : செப் 28, 2025 04:22 PM


Google News
Latest Tamil News
சென்னை; சென்னையில் தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டை திமுக மாணவர் அணியினர் முற்றுகையிட்டனர்.

கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 2 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை இதில் அடக்கம். சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தின் நீட்சியாக, நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை கைது செய்ய கோரி ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். மறுபுறம், தமிழக போலீஸ் கவனக்குறைவே இதுபோன்ற துயர சம்பவத்தின் காரணமாகி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந் நிலையில், சென்னையில் பனையூரில் உள்ள விஜய் வீட்டை தமிழ் மாணவர் மன்றத்தினர் முற்றுகையிட்டனர். இவர்கள் திமுக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். விஜய்க்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பிய போராட்டக்காரர்கள், குழந்தைகளின் உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இவர்களின் கண்டன போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொண்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us