Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வெயிலில் மயக்கமா? பக்கவாட்டில் படுக்க வையுங்கள்!

வெயிலில் மயக்கமா? பக்கவாட்டில் படுக்க வையுங்கள்!

வெயிலில் மயக்கமா? பக்கவாட்டில் படுக்க வையுங்கள்!

வெயிலில் மயக்கமா? பக்கவாட்டில் படுக்க வையுங்கள்!

ADDED : மார் 25, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
சென்னை : 'கோடை வெயிலில் யாரேனும் மயக்கமடைந்தால், அவர்களை இடது பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:


வெயிலில் மயக்கம் அடைந்து, சுய நினைவை இழந்து இருப்பவர்களை, குப்புற அல்லது மல்லாக்க படுக்க வைக்கலாம். இந்த முறை, சிலருக்கு ஆபத்தாக முடியும்.

சுய நினைவில் இல்லாதவர்களுக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படலாம். சிலருக்கோ மாரடைப்பு போன்ற பாதிப்புக்கு வாய்ப்புள்ளது.

எனவே, மருத்துவ ரீதியில் பார்க்கும்போது, இதுபோன்ற நிலையில் இருப்பவர்களை, இடது பக்கவாட்டில் படுக்க வைக்கும் முறைதான் சிறந்தது. பின், 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளிக்க வேண்டும்.

அது வரும் வரை, அவர்களின் உடல் வெப்பத்தைக் குறைக்கும் வகையில், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து, உடல் சூட்டை தணிக்கலாம். மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற நடைமுறையில், அவர்களை வெப்ப வாதத்தில் இருந்து பாதுகாக்க முடியும்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us