போதையில் கார் ஓட்டிய திமுக சேர்மன்; முதியவர் உயிரிழப்பால் அதிர்ச்சி!
போதையில் கார் ஓட்டிய திமுக சேர்மன்; முதியவர் உயிரிழப்பால் அதிர்ச்சி!
போதையில் கார் ஓட்டிய திமுக சேர்மன்; முதியவர் உயிரிழப்பால் அதிர்ச்சி!

திருப்பூர்: திருப்பூர் அருகே போதையில் கார் ஓட்டி சென்ற திமுக பேரூராட்சி சேர்மன், டூவீலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். அதில், முதியவர் பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 57. இவர் இன்று (செப்.,10) மாலை, அப்பகுதியில் டீக்கடைக்கு டூவீலரில் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ரோட்டில் வந்த கார், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதில், பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.
காரில் இருந்தவர் போதையில் இருப்பது தெரிந்தது. பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்த அவர், காரை வேகமாக எடுத்து தப்பி சென்றார்.
மங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரித்தனர். அதில், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றது, சாமளாபுரம் திமுக பேரூராட்சி சேர்மன், கருகம்பாளையம் ராம் நகரை சேர்ந்த விநாயகா பழனிசாமி, 60 என்பது தெரிந்தது. வீட்டுக்கு சென்ற போலீசார் விபத்து ஏற்படுத்திய அவரை ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.