Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இன்னும் 2 மாதங்களில் சென்னையில் ஏர் டாக்ஸி சோதனை

இன்னும் 2 மாதங்களில் சென்னையில் ஏர் டாக்ஸி சோதனை

இன்னும் 2 மாதங்களில் சென்னையில் ஏர் டாக்ஸி சோதனை

இன்னும் 2 மாதங்களில் சென்னையில் ஏர் டாக்ஸி சோதனை

UPDATED : டிச 01, 2025 05:48 PMADDED : டிச 01, 2025 05:09 PM


Google News
Latest Tamil News
சென்னை: இன்னும் 2 மாதங்களில் ஏர் டாக்ஸி சோதனையை நடத்த இபிளேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இபிளேன் நிறுவனம் தயாரிக்கும் செங்குத்தாக ஏறி, இறங்கும் அமைப்பைக் கொண்ட ஏர் டாக்ஸி (All-electric vertical take-off and landing) விமானங்களின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த சூழலில், இன்னும் ஓரிரு மாதங்களில் சோதனை நடத்தப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



இது குறித்து அந்நிறுவனம் தரப்பில் கூறியதாவது; இறுதிக்கட்ட பணிகளை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட சோதனையை சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள 250 ஏக்கர் பரப்பளவுள்ள ஐடிஏஎஸ் செயற்கைக்கோள் வளாகத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.



அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் வேறு இடத்தில் பறக்கும் சோதனை நிகழ்த்தப்பட உள்ளது. இதற்காக டிஜிசிஏவிடம் அனுமதி பெற்ற பாதை உருவாக்கப்பட்டுள்ளது.



ஏர் ஆம்புலன்ஸ்களுக்கு 2027ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அனுமதி பெறப்படும். அதைத் தொடர்ந்து, அதே ஆண்டின் இறுதிக்குள் ஏர் டாக்ஸி மற்றும் ஏர் சரக்கு சேவை விமானங்களுக்கும் ஒப்புதல் பெறப்படும்.



இதுவரை விமானங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றோம்.அதேவேளையில், ஏர் டாக்ஸி மற்றும் ஏர் ஆம்புலன்ஸ்களின் பயன்பாட்டுக்கான ஆப்பரேட்டர்களுக்கு பேச்சு நடத்தி வருகிறோம். தற்போதைய ஹெலிகாப்டர் கட்டணங்கள் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை உள்ள நிலையில், ஏர் ஆம்புலன்ஸ்களின் கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே இருக்கும்.



ஆண்டுக்கு 100 விமானங்கள் என்ற என்ற உற்பத்தியை மேற்கொள்வதற்கான பார்ட்னர்ஷிப் நிறுவனத்தை தேடி வருகிறோம். இது எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 900 முதல் 1,000 வரை செல்லலாம், இவ்வாறு கூறப்பட்டுள்ளது







      Our Apps Available On




      Dinamalar

      Follow us