Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

ADDED : மார் 17, 2025 02:17 PM


Google News
Latest Tamil News
சென்னை: 'சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்பவில்லை. சபாநாயகர் மீண்டும் பழையபடியே செயல்படுகிறார்' என எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை தலைமை செயலக வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர் சட்டபையில் பேசுவதை ஒளிபரப்பு செய்வதில்லை. கவர்னர் உரையின் மீதான விவாதத்தின் போது அவையில் நான் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் பேசினேன். நான் பேசியதை சி.டி.,யில் பதிவு செய்து தருமாறு சபாநாயகர் அப்பாவுடன் கேட்டோம்.

2 நிமிடங்கள் மட்டுமே!

அவர்கள் 46 நிமிடங்கள் மட்டுமே சிடியில் பதிவு செய்து கொடுத்தனர்.சி.டி.,யில் பெரும்பாலான நேரம் முதல்வர், அமைச்சர்கள் பேசியது மட்டுமே இருந்தது. நான் பேசியது இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தது. இது சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை என்பதற்கு உதாரணம்.

சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தான் தீர்மானத்தைக் கொண்டுவந்தோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்பவில்லை. முதல்வர் ஸ்டாலின் பேசுவது மட்டும் ஒளிபரப்பாகிறது. இது தான் ஒருதலைபட்சம்.

சபாநாயகர் மீண்டும் பழையபடியே செயல்படுகிறார். ஒருதலைபட்சமாக செயல்படுவது சபாநாயகருக்கு அழகல்ல. இது புனிதமான நாற்காலி. அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு தடை விதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் ஏராளமான மக்கள் பிரச்னைகள் உள்ளதால் அதிக நேரம் பேச வேண்டி இருந்தது. கேள்வி கேட்டால் அமைச்சர்களுக்கு பதில் சபாநாயகரே பதில் சொல்கிறார். வெற்றி தோல்வி என்பதல்ல, நடுநிலையோடு சபாநாயகர் செயல்பட வேண்டும் என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்தோம்.

தமிழகத்தில் சிந்திக்கக் கூடிய அறிவுப்பூர்வமான மக்கள் உள்ளனர். அவர்களை ஏமாற்ற முடியாது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறுவது முக்கியமில்லை. மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் கடன் மட்டுமே வாங்கி எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us