தனுஷ்கோடி கடலில் விழுந்து மீனவர் பலி
தனுஷ்கோடி கடலில் விழுந்து மீனவர் பலி
தனுஷ்கோடி கடலில் விழுந்து மீனவர் பலி
ADDED : ஜன 09, 2024 02:42 AM
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புது ரோடு சுனாமி குடியிருப்பை சேர்ந்த அருளானந்தம் மகன் பிரவீன்ராஜ் 34.
மீனவரான இவர் நேற்று முன்தினம் தனுஷ்கோடி தென் கடலில் சிறியரக நாட்டுப்படகில் துாண்டிலில் கணவாய் மீன் பிடித்துள்ளார். அப்போது கடலில் வீசிய சூறாவளியால் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் ராட்சத அலையில் படகு சிக்கி கவிழ்ந்தது.
படகில் இருந்த மீனவர் பிரவீன்ராஜ் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தார். அப்பகுதியில் மீன்பிடித்த தனுஷ்கோடி மீனவர்கள் மூழ்கிய மீனவரின் உடலை சிலமணி நேரம் தேடி மீட்டனர். தனுஷ்கோடி மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.


