4 ஆண்டில் பெயர்ந்து விழுந்தது அரசு பள்ளிக்கட்டடம்: நடவடிக்கை கோரிய கிராம மக்கள்
4 ஆண்டில் பெயர்ந்து விழுந்தது அரசு பள்ளிக்கட்டடம்: நடவடிக்கை கோரிய கிராம மக்கள்
4 ஆண்டில் பெயர்ந்து விழுந்தது அரசு பள்ளிக்கட்டடம்: நடவடிக்கை கோரிய கிராம மக்கள்
ADDED : மார் 17, 2025 07:26 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.63 கோடி ரூபாயில் நான்கு ஆண்டுக்கு முன் கட்டிய பள்ளிக்கட்டடம், மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை கோரி, கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பனையடியேந்தல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதன் கட்டடம், 2021ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விட்டது. இதில், பள்ளிக்குழந்தைகள் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
கட்டி முடித்து நான்கு ஆண்டுகளிலேயே மேற்கூரை பெயர்ந்து விழும் அளவுக்கு தரம் இன்றி பள்ளிக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உப்பு நீரை பயன்படுத்தியும், தரமற்ற மணல் பயன்படுத்தியும் கட்டடம் கட்டியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இப்படி மோசமாக கட்டிய கட்டட ஒப்பந்ததாரர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில், இன்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.