Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சித்த மருத்துவ பல்கலை மசோதா விவகாரம் கவர்னர் கருத்துகள் சட்டசபையில் நிராகரிப்பு முதல்வர் தீர்மானம் நிறைவேற்றம்

சித்த மருத்துவ பல்கலை மசோதா விவகாரம் கவர்னர் கருத்துகள் சட்டசபையில் நிராகரிப்பு முதல்வர் தீர்மானம் நிறைவேற்றம்

சித்த மருத்துவ பல்கலை மசோதா விவகாரம் கவர்னர் கருத்துகள் சட்டசபையில் நிராகரிப்பு முதல்வர் தீர்மானம் நிறைவேற்றம்

சித்த மருத்துவ பல்கலை மசோதா விவகாரம் கவர்னர் கருத்துகள் சட்டசபையில் நிராகரிப்பு முதல்வர் தீர்மானம் நிறைவேற்றம்

ADDED : அக் 16, 2025 09:32 PM


Google News
சென்னை: சித்த மருத்துவ பல்கலை மசோதா குறித்து கவர்னர் ரவி தெரிவித்த கருத்துகள், சட்டசபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

சட்டசபையில் , தமிழ்நாடு சித்த பல்கலை சட்ட மசோதாவை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

பரிந்துரை அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சித்த மருத்துவ பல்கலை ச ட்ட மசோதா, நிதி சட்ட மசோதா வகைப்பாட்டில் வருவதால், இதை சட்ட சபையில் ஆய்வு செய்ய, அரசியலமைப்பு சட்டம் பிரிவின்படி, கவர்னரின் பரி ந்துரை பெறப்பட வேண்டும்.

பொது மக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, மக்களாட்சியின் ஒரு துாணாக கருதப்படும் நிர்வாகத்தால், மக்கள் நல்வாழ்வு துறையால் வரைவு சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, சட்டத்துறையால் சரிபார்க்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு, சட்ட மசோதாவின் அச்சடிக்கப்பட்ட பிரதி, கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின்படி பின்பற்றப்ப ட்டு வந்த வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல், இந்த மசோதாவில் உள்ள சில பிரிவுகள் குறித்து, தன் க ருத்தை தெரிவித்துள்ளார்.

அந்த கருத்துகள், எம்.எல்.ஏ.,க்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது, அரசியல் சட்டத்திற்கும், சட்டசபை விதிமுறை களுக்கும் முரணானது.

ஒரு சட்ட மசோதா சட்ட சபையில் விவாதிக்கப்படும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே, அதில் திருத்தங்களை முன்மொழியவும், திருத்தங்களை திரும்பப் பெ றவும், இல்லையெனில் ஓட்டெடுப்பு கோரவும் அதிகாரம் உள்ளது.

சட்டசபையில் நிறைவேற்றப்படுவதற்கு முன், மசோதா மீது கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்லை. எனவே, கவர்னரிடம் இருந்து வந்துள்ள செய்தியில் இடம் பெற்றுள்ள கருத்துகளை, சட்டசபையால் ஏற்க இயலாது.

சட்டசபை ஆய்வு மேலும், 'கருத்தில் கொள்ள வேண்டும்' என்று சொல்ல வேண்டிய கவர்னர், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக, 'பொருத்தமான முறையில் ஆய்வு செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்ட மசோதாக்களை, 'பொருத்தமற்ற முறையில் அல்லது த குந்த முறையில் அல்லாமல்' சட்டசபை ஆய்வு செய்யும் தொனியில், 'பொருத்தமான அல்லது தகுந்த' எனும் பொருள்படக்கூடிய வார்த்தையை சேர்த்திருப்பது, சட்டசபையின் மாண்பை குறைக்கக் கூடிய கருத்து என்பதால், அதை ஏற்க முடியாது.

சட்டம் இயற்றுவது சட்டசபைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். எனவே, கவர்னரிடம் இருந்து வந்துள்ள கருத்துகள் அடங்கிய செய்தி, சபை குறிப்பில் இடம் பெறுவதை, மாநில சுயாட்சியில் நம்பிக்கை உடைய எந்த ஒரு எம்.எல்.ஏ.,வும் ஏற்க மாட்டார். எனவே, அந்த கருத்துகளை இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை.

எனவே, 'சித் த மருத்துவ பல்கலை சட்ட மசோதாவை சட்டசபையில் ஆய்வு செய்வதற்கு, கவர்னர் அனுப்பியுள்ள செய்தியில் உள்ள அவரின் கருத்துகள் மற்றும் சபை மாண்பை குறைக்கக் கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை சட்டசபை நிராகரிக்கிறது' என்ற தீர்மானத்தை மொழிகிறே ன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதை தொடர்ந்து, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us