ஜி.எஸ்.டி. குறைப்பு; மக்களுக்கு அதீத மகிழ்ச்சி: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி
ஜி.எஸ்.டி. குறைப்பு; மக்களுக்கு அதீத மகிழ்ச்சி: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி
ஜி.எஸ்.டி. குறைப்பு; மக்களுக்கு அதீத மகிழ்ச்சி: விற்பனை அதிகரிப்பதால் வர்த்தகர்கள் நெகிழ்ச்சி

அவர்களின் கருத்துக்களில் சில...
கார் விற்பனை அதிகரிக்கும்!
ஜி.எஸ்.டி., குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து, மக்களிடம் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதற்காகவே காத்திருந்ததுபோல், சில நாட்களாக எங்களை தொடர்பு கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
எதிர்பார்க்காத ஒன்று
ஜி.எஸ்.டி.,யில் 10 சதவீதம் குறைக்கப்பட்டது, யாருமே எதிர்பார்க்காத ஒன்று. இது மிகப்பெரிய தள்ளுபடி. வழக்கமாக டிச., மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகை வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் அதுவரை காத்திருந்து, வாகனங்களை வாங்குவர். ஆனால், தற்போது பண்டிகை காலத்தை ஒட்டி நாங்கள் வழங்கும் சலுகைகளுடன் சேர்த்து, இந்த வரி சீரமைப்பும் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நிறைவேறுகிறது கார் கனவு
வரி சீரமைப்பானது மக்களின் கார் வாங்கும் கனவை நிறைவேற்றியுள்ளது. எங்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. விற்பனையும் அதிகரித்துள்ளது. எங்களின் டைகன் பேஸ் மாடல் - ரூ.10,99,000ல் இருந்து, ரூ.10,58,300 என, 40,700 ரூபாய் குறைந்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி
ஜி.எஸ்.டி., சீரமைப்பால், இலகு ரக வர்த்தக வாகனங்களின் விலை ரூ.50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு குறித்த அறிவிப்பு வந்தது முதல் என்கொயரி மற்றும் புக்கிங் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை.
4 முதல் 5 மடங்கு அதிகம்
வரி சீரமைப்புக்கு பின், எங்கள் விற்பனை 4 முதல் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இது, எங்களை போன்ற வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், மக்களும் அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது வாகனங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பொலிரோ/நியோ விலை, ரூ.1,27,200 குறைந்துள்ளது.