Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கன்னியாகுமரியில் கொட்டியது கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கன்னியாகுமரியில் கொட்டியது கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கன்னியாகுமரியில் கொட்டியது கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கன்னியாகுமரியில் கொட்டியது கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ADDED : செப் 26, 2025 08:11 AM


Google News
Latest Tamil News
கன்னியாகுமரி: கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செப் 26) விடுமுறை அறவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மயிலாடி, தக்கலை, இரணியல், அடையாமடை, ஆணைக்கிடங்கு உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்தது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.27 அடியாக இருந்தது. அணைக்கு 672 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 764 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

பேச்சிப்பாறை - 115.8

சிற்றார்- 150.4

பெருஞ்சாணி 128.8,

மயிலாடி -64

நாகர்கோவில் 70.2

கன்னிமார் 22.6

ஆரல்வாய்மொழி 39

பூதப்பாண்டி- 30.2

பாலமோர் 55.2

தக்கலை - 54

குளச்சல் - 57.4

இரணியல்- 67

அடையாமடை- 142.4

குருந்தன்கோடு- 58

கோழிபோர்விளை- 88.6

மாம்பழத்துறையாறு- 90.2

ஆணைக்கிடங்கு - 84

களியல்- 75

குழித்துறை- 139.4

சுருளோடு- 160.4

திற்பரப்பு - 182

முள்ளங்கினாவிளை-88.6

விடுமுறை

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செப் 26) விடுமுறை அறவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us