உலகம் சுற்ற உதவுங்கள் ரஷ்ய வாலிபர்கள் பதாகை
உலகம் சுற்ற உதவுங்கள் ரஷ்ய வாலிபர்கள் பதாகை
உலகம் சுற்ற உதவுங்கள் ரஷ்ய வாலிபர்கள் பதாகை
ADDED : பிப் 11, 2024 12:01 AM

சென்னை:சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சிக்னலில், வெளிநாட்டு இளைஞர்கள் மூவர், சொந்த நாடு செல்ல பணம் கொடுத்து உதவ கோரி பதாகைகளை ஏந்தி நின்றனர்.
அதில், 'உலகம் முழுதும் பயணம் செய்து வருகிறோம். எங்களுக்கு பணம் உதவி செய்ய, இந்தியர்கள் முன்வர வேண்டும்' என எழுதியிருந்தனர். இதை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், அவர்களுக்கு பணம் கொடுத்து உதவினர். அவர்களிடம் விசாரிக்க, கூட்டம் கூடியது.
இது குறித்து அறிந்த திருவல்லிக்கேணி போலீசார், அங்கு சென்று, மூவரிடமும் விசாரித்தனர். அவர்கள், ரஷ்ய நாட்டைச் சேர்ந்தோர் என்பது தெரிந்தது.
தவிர, 'இந்தியா முழுதும் சுற்றுப்பயணமாக வந்தோம். கடைசியாக சென்னையை அடைந்தோம். கைவசம் இருந்த பணம் தீர்ந்துவிட்டதால், சொந்த நாடு செல்ல முடியவில்லை. பண உதவி செய்தால் ரஷ்ய சென்றுவிடுவோம்' என தெரிவித்தனர்.
இதற்கு போலீசார், 'இவ்வாறு செய்வது தவறு. சென்னையில் உள்ள ரஷ்ய துணை துாதரகத்தை அணுகினால் உங்களுக்கு உதவி கிடைக்கும்' என அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர்.