வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாக ஜெர்மனி விளங்குகிறது. முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், 54 லட்சம் எம்எஸ்எம்இ., நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.
பிஸ்னஸ்
வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன். தமிழகத்துக்கு வரும் போது நீங்கள் வியாபாரத்திற்கான சண்டையாக மட்டும் பார்க்க மாட்டீங்க. உங்களுடன் இருந்து உங்கள் வெற்றியை கொண்டாடுகிற பங்குதாரர்களாக பார்ப்பீர்கள்.
ரூ.7,020 கோடியில் ஒப்பந்தங்கள்
முன்னதாக, சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனி வருகையின் போது தமிழகத்திற்கு மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன;
இதனால் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ஜெர்மனி முதலீட்டாளர் மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவை 9,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழகத்தை தேர்ந்து எடுத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.