என் உடலில் உயிர் இருக்கிற வரையில் உழைப்பேன்: முதல்வர் ஸ்டாலின்
என் உடலில் உயிர் இருக்கிற வரையில் உழைப்பேன்: முதல்வர் ஸ்டாலின்
என் உடலில் உயிர் இருக்கிற வரையில் உழைப்பேன்: முதல்வர் ஸ்டாலின்

உயிர் இருக்கிற வரையில்…!
இன்னும் வேகமாக என்னுடைய கடமையை வேகமாக நிறைவேற்றிவிட வேண்டும்.
சிறிய துவக்கம்
இன்று காலையில் இருந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் எல்லாம் கலந்து கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பெற்றுள்ள பயிற்சி சிறிய துவக்கம்தான். இதே பாதையில் வெற்றி பெற தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மனிதர்களின் வேலை சுமையை இந்த வளர்ச்சி வெகுவாக குறைத்து கொண்டு வருகிறது.
அறிவு தகவல்கள்
அதற்கு ஏற்ற மாதிரி நீங்களும் அப்கிரேட் ஆகி வர வேண்டும். அது தான் எனது விருப்பம்.
எதிர்காலம்
படிப்பு தான் உங்களுக்கு கடைசி வரை துணை நிற்கும். அது தான் உங்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்த கூடிய, கல்வியால் பெறப்படும் அறிவினை கொஞ்சப்படுத்த சிலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். எனவே எதிர்காலத்திற்கு என்ன தேவையோ அதனை நோக்கி நீங்கள் நடை போட வேண்டும்.
தமிழக மாணவர்கள் படிப்புக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது. தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்பது நமது ஒற்றுமையை காட்டுகிறது.