ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்

யார் இவர்
வெங்டேசன் -- ராணி தம்பதிகளுக்கு களாக 1969ம் ஆண்டு பிறந்தவர் பீலா. தந்தை வெங்கடேசன், போலீஸ் டி.ஜி.பி.,யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது அம்மா ராணி வெங்கடேசன், பாரம்பரிய காங்கிரஸ்காரர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி வெங்கடேசன், 2006 சட்டசபைத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனவர்.
பெயர் மாற்றம்
திருமணத்துக்கு பிறகு பீலா ராஜேஷ் என அவர் அழைக்கப்பட்டார். ஆனால், முன்னாள் டிஜிபியான ராஜேஷ்தாஸ் பாலியல் புகாரில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், அவர் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றிக் கொண்டார். அதற்கு முன்னர் கணவரை விவாகரத்து செய்தார்.
கவர்னர் ரவி
பீலா வெங்கடேசனின் அகால மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அர்ப்பணிப்புள்ள அதிகாரியான அவரது தலைமைத்துவமும், கூர்மையான நிர்வாகத் திறன்களும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது அர்ப்பணிப்பு மூலம் சுகாதாரம் மற்றும் அரசு நிர்வாகத்தில் நீடித்த மரபை விட்டுச் செல்கின்றன. அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கல்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.