Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவை கொடிசியாவில் ‛இன்டெக் தொழில் கண்காட்சி-2024 '

கோவை கொடிசியாவில் ‛இன்டெக் தொழில் கண்காட்சி-2024 '

கோவை கொடிசியாவில் ‛இன்டெக் தொழில் கண்காட்சி-2024 '

கோவை கொடிசியாவில் ‛இன்டெக் தொழில் கண்காட்சி-2024 '

UPDATED : ஜூன் 02, 2024 11:11 AMADDED : ஜூன் 02, 2024 11:09 AM


Google News
Latest Tamil News

அறிமுகம்


கொடிசியா எனும் கோயம்புத்துார் மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் 1969ம் ஆண்டு 40 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 6700 உறுப்பினர்களுடன் ஐ எஸ் ஓ 9001:2015 தர நிர்ணயம் பெற்ற அமைப்பாக இயங்கி வருகிறது. பம்ப், மோட்டார், பவுண்டரி, ஜவுளி எந்திரங்கள், உதிரி பாகங்கள், கிரைண்டர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஸ்பெஷாலிட்டி வால்வுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் பிரிவுகளைச் சார்ந்த உறுப்பினர்கள் இதன் அங்கமாக உள்ளனர்.

கோயம்புத்தூர் என்பது பம்ப் மோட்டார், ஜவுளித்துறை, பவுண்டரி, பேப்ரிகேஷன், மெஷின் ஷாப், பரிசிஷன் டூல்ஸ்,டைஸ், மோல்டு, கட்டிங் டூல்ஸ் என்று பலவகை தொழில் உற்பத்தி பொருட்கள் மற்றும் துணைப் பொருட்கள் தயாரிக்கும் மையமாக திகழ்கிறது என்பதை அனைவரும் அறிவர்.

இப்பகுதியில் இயங்கிவரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடு தொழிற்சாலைகள், எந்திர தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட தொழில்துறையினருக்கு தேவையானவற்றை பெறுவதற்கான பெரும் வாய்ப்பாக உள்ளன. இப்பகுதியில் பொருளாதாரத்தின் பெரும் பகுதி இந்த தொழிற்சாலைகளை சார்ந்தே அமைகிறது. இவர்களுக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை வழங்குகின்ற தளமாக இன்டெக் தொழில்நுட்ப கண்காட்சி திகழ்கிறது.

இன்டெக் கண்காட்சி


சர்வதேச அளவில் உருவாகும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை தொழில்துறை சார்ந்தோர் அறிந்து கொள்ளவும், தங்களது தயாரிப்புகள் சார்ந்த எந்திரங்களை வாங்குவதற்குமான ஒரு அரிய வாய்ப்பை வழங்கும் இடமாக இந்த இந்த இன்டெக் கண்காட்சி அமைந்திருக்கிறது.

உலகெங்கும் உள்ள நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளை, இந்திய தொழிற்சாலைகள் குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் பெரும் வகையில் ஒரு இணைப்பு பாலமாக கொடிசியா செயல் பங்கு வருகிறது.

Image 1276643

இந்திய நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள தொழில் வளர்ச்சிகளை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக, இந்த தொழில் கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மற்ற கண்காட்சிகளை போல் அல்லாது இயந்திரங்களை வாங்கும் சக்தியும், தேவையும் கொண்ட பலரையும் உறுப்பினர்களாகக் கொண்ட கொடிசியா என்னும் அமைப்பு நடத்துவதால், விற்பனையாளர்களும், வாங்குவதை முடிவு செய்வோரும் சந்திக்கும் ஒரே தொழில்நுட்பக் கண்காட்சியாக இது திகழ்கிறது.

இந்தப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் எப்போதும் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடும் மனோபாவம் கொண்டவை என்பது இந்த கண்காட்சியில் பங்கெடுக்க உதவியாக இருக்கிறது. உலக அளவிலான தொழில் புரிவோரின் பங்கெ டுப்பு இங்கு நடக்கும் தொழிற்சார் வணிகம் இதற்கு அளிக்கப்படும் ஊக்கம் ஆகியவற்றின் மூலம் இந்த கண்காட்சி தென்னிந்தியாவிலே மிகவும் பிரபலமான பயன் தரு கண்காட்சியாக விளங்குகிறது.

இந்த இன்டெக் தொழில் கண்காட்சிகளில் மூலமாக இப்பகுதி தொழில்துறை பெற்ற பயன்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்

* இந்த இன்டெக் தொழில் கண்காட்சி மூலம் வெளிநாட்டு எந்திர தயாரிப்பாளர்கள் கோவையில் உள்ள தொழில்துறையினரின் திறன் மற்றும் தேவைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

* இதன் மூலமாக கோவையில் பல கூட்டுத் தொழில் முயற்சிகள் தொடங்கப்பட்டு புதிய தொழில்கள் இப்பகுதியில் உருவாக்கியுள்ளன.

* ஏராளமான வெளிநாட்டு தொழிற்சாலைகள் கோவையில் தங்கள் உற்பத்தி மையங்களை நேரடியாக அமைத்துள்ளன.

Image 1276644

* உலகெங்கும் உள்ள பெரும் தொழில் குழுமங்கள் தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை பெறும் இடமாக கோவையை உருவாக்குவதில் இன்டெக் பங்கு முக்கியமானதாகும்.

* புதிய தொழில்நுட்பங்களை இன்டெக் கண்காட்சி மூலம் பெறுவதால் இங்கு செய்யப்படும் உற்பத்தி பொருட்கள் தரம் உயர்ந்தது அதன் விளைவாக ஏற்றுமதி அதிகரித்து அன்னியச் செலவாணியும் கிடைக்கிறது.

* இன்டெக் தொழில் கண்காட்சி மூலமாக எங்கு உருவாகியுள்ள புத்தாக்க தொழில்நுட்பங்களை தொழிற்சாலைகள் பின்பற்றுவதால், உலகெங்கும் உள்ள ஸ்பெஷாலிட்டி வால்வு தயாரிப்பாளர்கள் கோவையில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றனர்.

இன்டெக் கண்காட்சியின் வெற்றிக்கு காரணங்கள்:


* ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அந்தத் திட்டத்தை எடுத்து செயல்படுவோரை பொறுத்தே அமையும் அந்த வகையில் இன்டெக் கண்காட்சி வெற்றிகரமாக இயங்கு காரணமாக அதன் அமைப்பாளர்கள் திகழ்கின்றனர்.

* கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வரும் கொடிசியா எனும் ஆற்றல் மிகு பின்புலம், கோவையின் வளரும் தொழிற்சாலைக்கு ஒரு உறுதியான பின்புலமாக அமைகிறது.

* நாட்டின் உற்பத்திப தேவைப்படும் உற்பத்திப் பொருட்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட ஏராளமான பொறியியல் சார்ந்த பொருட்களை, கோவையின் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து வருகின்றன. பவுண்டரி காஸ்ட்டிங்கள், மெஷின் டூல்ஸ், மின்மோட்டார் மற்றும் பம்புகள், வெட் கிரைண்டர், டெக்ஸ்டைல், எந்திரங்கள், தொழிற்சாலை பிளாஸ்டிக்குகள், உதிரி பாகங்கள், உள்நாட்டு மின் சாதனங்கள், மின் மாற்றிகள், காட்டன் தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் பாகங்கள், வால்வுகள் உள்ளிட்ட ஏராளமான உற்பத்தி பொருட்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

* இந்த வகை தொழிற்சாலைகள், இன்டக் கண்காட்சியின் காட்சிப்படுத்தப் படும் பொருட்களை வாங்க தகுதியுள்ள ஒரு மதிப்பு மிகு குழுவாக மாறி வருகிறது.

* எல்லா வகையான தொழில்நுட்ப தீர்வுகளும் கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு இப்பகுதியில் சிறு குறு தொழிற்சாலைகள் தங்களுக்கே உரித்தான தொழில் முனைவோருக்கான துணிவோடு இக்கண்காட்சிக்கும் நம்பிக்கை ஊட்டுகின்றன.

இன்டெக் 2024


வருகின்ற ஜூன் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ள இன்டெக் தொழில் கண்காட்சி 2024 ஆனது, கொடிசியா தொழிற் காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. இன்டெக் 2024 கண்காட்சியின் ஒரு அங்கமாக வரும் ஜூன் ஏழாம் தேதி 2024 ஆம் ஆண்டு, தங்களது கருத்தரங்க பங்குதாரரான டெக்ஸாஸ் வென்ச்சருடன் இணைந்து வழங்கும் 11 வது குளோபல் மன்யூ மேட்சிங் கிளஸ்டர் விஷன் (GMCV 2030) எனும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தயாரிப்பு தொழிற்சாலைகளில் Smart Manufacturing கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடைய முடியும்.

இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள பொறி தொழிற்சாலைகள் அளிக்கும் வரவேற்பு நல்ல முறையில் உள்ளது. பல்வேறு துறை சார்ந்த சுமார் 500 முக்கிய தொழிற்சாலைகள் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக குவிந்துள்ளன. தங்களுடைய நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதற்காக அவர்களுக்கு சுமார் 25,000 சதுர மீட்டர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அணிவகுக்கும் நமது சமகால நவீன தொழில்நுட்பங்கள் கண்டிப்பாக இந்த பகுதியில் வளர்ச்சியை ஊக்குவித்து உதவும்.

கண்காட்சியைப் பார்வையிட விரும்புவோர், கீழ்க்கண்ட லிங்க்கில் பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்:





      Our Apps Available On




      Dinamalar

      Follow us