ஒருங்கிணைப்பு பணி விரைவில் முடியும்
ஒருங்கிணைப்பு பணி விரைவில் முடியும்
ஒருங்கிணைப்பு பணி விரைவில் முடியும்
ADDED : செப் 26, 2025 06:22 AM

அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்புக்கான கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அது குறித்து, கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் மற்றும் நண்பர்கள் என்னிடம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டு தான் உள்ளனர். அவர்கள் யார் என்பதை வெளியே சொல்ல முடியாது; அது சஸ்பென்ஸ்.
ஆனால், இதுநாள் வரை ஒருங்கிணைப்பு குறித்து நான் சொன்ன கருத்துகளுக்கு , எதிர்கருத்து களை யாரும் கூறவில்லை. அப்படி இருக்கும்போது, என் கருத்து தானே, அனைவருடைய கருத்தாக இருக்கிறது. பன்னீர் செல்வம், தினகரன் தவிர முன்னாள் அமைச்சர்கள் என்னிடம் பேசினரா என்பது குறித்தும் சொல்ல முடியாது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒருங்கிணைப்பு பணிகள் விரைவில் முடிவுக்கு வரும். அமித் ஷா தவிர, வேறு டில்லி தலைவர்களை இப்போதைக்கு சந்திக்கும் எண்ணம் இல்லை.
- செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,