தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டம்
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டம்
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டம்
ADDED : மார் 23, 2025 11:34 AM

சென்னை: ஜாக்டோ- ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதால், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (மார்ச் 23) மாவட்டத் தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் டாடாபாத் சிவானந்தா காலனியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி, சேலம், திருச்சி,நாமக்கல், மதுரை, தஞ்சாவூரிலும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: பட்ஜெட் அறிவிப்பில், எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். உயர்பநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.