ADDED : மே 14, 2026 03:33 AM

ஆசிரியர் : ஸ்ரீனிவாசன்
வெளியீடு : ↓தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட்.,
டோல்ப்ரீ : 1800 425 7700
: 75500 09565
பக்கம் : 152
விலை : ரூ. 220
தொ ழில் முனைவோர் எப்படி செயல்பட வேணடும்; தொடங்கும் முன செய்ய வேண்டிவை என்னென்ன எனபைதைச் சுவைபட எளிமையாக விளக்குகிறார் இந்த நுாலின் ஆசிரியர் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்.
சர்க்கஸில் ஒரு ரிங் மாஸ்டர் என்ன செய்கிறார்? சிங்கம், யானை, கரடி போன்ற விலங்குகளை அடக்கி ஆள்கிறார். அதற்கு அவைகளைப் பழக்குகிறார். தொழில் முனைவோரும் அப்படிப்பட்டப் பணியில்தான் ஈடுபட வேண்டும். கொள்முதல், விற்பனை, ஊழியர்களிடம் வேலை வாங்குதல் என்று ஒரு ரிங் மாஸ்டராக multi-tasking பணியைச் செய்ய வேண்டும். அதற்கான மேலாண்மைத் திறன் இருந்தால் வெற்றி நிச்சயம்!
நிறுவனத்தைத் தொடங்கு முன் சந்தை ஆய்வைச் செய்வது பல விதங்களில் நன்மை தரும். சந்தைத் தேவையை நம்மால் பூர்த்தி செய்ய முடியுமா? அதற்கான தனித் திறன்கள் நம்மிடம் உள்ளனவா? இந்தக் கேள்விகளை நடுநிலையோடு நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இதை உள்வாங்கினால் வெற்றி நிச்சயம்!
வியாபாரத்தில் உள்ள தடைகள் அல்லது தடங்கல்கள். இவற்றை நாம் எப்படிக் கையாள்கிறோம்? வர வேண்டிய மொத்தத் தொகை கட்டுக்குள் இருக்க வேண்டும். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்.
“நான் சுயமாகத் தொழில் செய்ய விரும்புகிறேன். தரமான பொருளை விற்கிறேன். நுகர்வோரின் வாழ்க்கையில் என் பங்கு முக்கியம்” என்னும் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அதுவே இலக்காக அமைதல் அவசியம்.
தொழில்முனையும் நண்பர்கள் இதைப் போன்ற வியாபாரத்தில் வெற்றி பெற்றவர்களின் கதைகளைப் படிக்கிறார்கள். தொழில் முனைவோர் தோல்விக் கதைகளையும் தெரிந்து கொள்வது அவசியம். அது தரும் பாடங்களையும் உள்வாங்க வேண்டும்.
எந்த வியாபாரமாக இருந்தாலும் சரி. வாடிக்கையாளர்களை, வாடிக்கையாளராக ஆகக் கூடியவர்களிடம் சென்றடைய வேண்டிய செய்தி - “வந்துட்டேன்னு சொல்லு, கபாலி வந்துட்டேன்னு சொல்லு” என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
ஒரு தொழில்முனைவோர், அவ்வப்போது இந்த வகையில் தன் முன்னேற்றத்தை ஆராய்ந்து, தவறுகளைத் திருத்தி வெற்றி வாகை சூட வேண்டும்!
இது போன்ற பல யோசனைகளை புத்தகம் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார் வெற்றி விடியல் ஸ்ரீநிவாசனார்
புதிதாக தொழில் தொடங்க நினைப்போர்க்கும் புதிதாக அடயெடுத்து வைத்திருப்பவர்களுக்கும் மிக பயனுள்ள புத்தகம்.
- இளங்கோவன்





