திருவண்ணாமலையில் மஹா தீபம்; விண்ணதிர பக்தர்கள் 'அரோகரா' கோஷம்
திருவண்ணாமலையில் மஹா தீபம்; விண்ணதிர பக்தர்கள் 'அரோகரா' கோஷம்
திருவண்ணாமலையில் மஹா தீபம்; விண்ணதிர பக்தர்கள் 'அரோகரா' கோஷம்

'பரணி தீபம்'
முக்கிய நிகழ்ச்சியான மஹா தீபத்தையொட்டி, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், 'ஏகன் - அனேகன்' என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில், நெய் தீபம் ஏற்றப்பட்டு, அதை கொண்டு, ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு அதிகாலை, 4:00 மணிக்கு, 'பரணி தீபம்' ஏற்றப்பட்டது. பின்னர் அதை, சிவாச்சாரியார்கள் கையில் ஏந்திச்சென்று, அம்மன் சன்னிதி உட்பட கோவிலிலுள்ள அனைத்து சன்னிதிகளிலும், 'பரணி தீபம்' ஏற்றினர்.
அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்
பார்வதி தேவிக்கு, சிவபெருமான் தன் இடப்பாகத்தை அளித்ததை நினைவு கூறும் வகையில், அர்த்தநாரீஸ்வரராய், கோவிலினுள் இருந்து மலையை நோக்கி பார்த்தவாறே மாலை, 5:59 மணிக்கு வெளியே வர, காலையில் ஏற்றப்பட்ட, 'பரணி தீபம்' விளக்கிலிருந்து, கோவில் கொடிமரம் எதிரிலுள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டது.


