Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தர்ஷனா - அபராஜித்திற்கு மோடி, அமித் ஷா வாழ்த்து

தர்ஷனா - அபராஜித்திற்கு மோடி, அமித் ஷா வாழ்த்து

தர்ஷனா - அபராஜித்திற்கு மோடி, அமித் ஷா வாழ்த்து

தர்ஷனா - அபராஜித்திற்கு மோடி, அமித் ஷா வாழ்த்து

ADDED : ஜூன் 10, 2025 04:28 AM


Google News
சென்னை : 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் --- சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் தர்ஷனா - -அபராஜித் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. மணமக்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், 'இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில், மணமக்கள் தர்ஷனா --அபராஜித் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். புதுமண தம்பதி வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சி மற்றும் சுபிட்ஷமாக வாழவும், பொக்கிஷமான தருணங்கள் அவர்களிடம் நிறைந்திருக்கவும் வாழ்த்துகிறேன்.

'இருவரின் இதயங்களும், மனங்களும், செயல்களும் ஒன்றாக இருக்கட்டும். அனைத்து தருணங்களிலும் இருவரும் இணைந்து, தங்களின் கனவுகளை நனவாக்கும் தேடலில், கரங்கள் கோர்த்து செயல்பட வேண்டும். புதிய வாழ்க்கை பயணத்தில், பொருத்தமான தம்பதியாக இருக்க என் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்' என்று தெரிவித்து உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பிய வாழ்த்தில், 'மணமக்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.

'இதுபோன்ற ஒரு மங்களகரமான நிகழ்வுக்கு, என்னை அழைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. தங்கள் வாழ்க்கையில், புதிய கட்டத்தை துவங்கும் மணமக்கள் தர்ஷனா -- அபராஜித் இருவருக்கும் என் வாழ்த்துகள் மற்றும் ஆசீர்வாதங்கள். இருவரின் வாழ்க்கை பயணம் செழிப்புடன் அமைய வாழ்த்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அனுப்பிய செய்தியில், 'திருமண விழாவுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. மணமக்கள் தர்ஷனா - -அபராஜித் இருவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான, வளமான திருமண வாழ்க்கைக்கு என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us