Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மாற்றுத்திறனாளி தகவல்களை திரட்ட புதிய திட்டம் துவக்கம்

மாற்றுத்திறனாளி தகவல்களை திரட்ட புதிய திட்டம் துவக்கம்

மாற்றுத்திறனாளி தகவல்களை திரட்ட புதிய திட்டம் துவக்கம்

மாற்றுத்திறனாளி தகவல்களை திரட்ட புதிய திட்டம் துவக்கம்

ADDED : அக் 03, 2025 01:55 AM


Google News
சென்னை: தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட வாரியாக மாற்றுத்திறனாளிகள் தகவல்களை சேகரிக்கும் பணியை அரசு துவங்கி உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப, 22 வகை மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், உதவித்தொகை, உதவி உபகரணம் உள்ளிட்ட, அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் தங்களுக்கு கிடைப்ப தில்லை என, மாற்றுத்திறனாளிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதற்கு மாற்றுத்திறனாளிகள் குறித்த முழு தகவல்கள், அரசிடம் இல்லாதது தான் காரணம். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் தகவல்களை துல்லியமாக கண்டறியும் வகையில், உலக வங்கி நிதி உதவியுடன், 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' துவக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் படி, மாவட்டங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், மாற்றுத்திறனாளிகள் குறித்த முழுமையான தகவல்களை, அரசு திரட்டி வருகிறது.

அவ்வாறு அடையாளம் காணப்படும் நபரிடம், அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளனவா என்பது உறுதி செய்யப்பட்டு, இல்லாதவர்களுக்கு அவற்றை பெற, உரிய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, மாவட்ட வாரியாக, திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும், 13,000 மாற்றுத்திறனாளி கள் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us