ADDED : பிப் 02, 2024 01:21 AM
சென்னை:ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகளை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சமூக தணிக்கை செய்ய வேண்டும்.தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இயங்குகிறது.
சமூக தணிக்கை பணிக்காக நடப்பாண்டு முதல் தவணையாக மத்திய அரசு 13.17 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. அத்தொகையை தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்திற்கு விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.


