Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மோசடி வழக்கில் சிக்கியவர் நிகிதா

மோசடி வழக்கில் சிக்கியவர் நிகிதா

மோசடி வழக்கில் சிக்கியவர் நிகிதா

மோசடி வழக்கில் சிக்கியவர் நிகிதா

ADDED : ஜூலை 03, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
திருமங்கலம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கில் புகார் அளித்த நிகிதா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டம் திருமங்கலம், ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபெருமாள். மறைந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மகள் நிகிதா. இவர் 'முனைவர்' பட்டம் முடித்தவர். திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் பேராசிரியையாக உள்ளார்.

இவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மற்றொருவருடன் கூட்டு சேர்ந்து திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வசூலித்ததாகவும், அவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும் ரூ. பல லட்சம் மோசடி வழக்கு திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் 10.5.2011ல் பதிவானது. இதில், ஜெயபெருமாள், தாய் சிவகாமி, அண்ணன் கவியரசு, நிகிதா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தாயார் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, அம்மாவிற்கு ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுவிட்டு, மடப்புரம் கோயிலுக்கு சென்ற போது தான் நகை திருட்டு, அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது.

இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நிகிதாவுக்கு உதவி செய்தார் என்ற தகவல் பரவியது. ஆனால் நீதிமன்றத்தில் அந்த தகவல் தவறானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று நிகிதாவை தேடி பத்திரிகையாளர்கள் சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.

நிகிதா தரப்பினர் கூறியதாவது: நகையைக் காணவில்லை என்றுதான் நிகிதா புகார் கொடுத்திருந்தார். காவலாளி அஜித்குமார் இறந்துவிட்டார் என போலீஸ் சொல்லித்தான் அவருக்கு தெரியும். தி.மு.க பின்புலம், ஐ.ஏ.எஸ் உறவினர் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை என்றனர்.

போலீஸ் தரப்பில் கேட்டபோது, 'தலைமறைவாவதற்கு அவர் குற்றவாளி அல்ல. புகார்தாரர்தான்' என்றனர்.

மேலும் பல வழக்குகள்


நிகிதா, ஆலம்பட்டியில் உள்ள அவரது வீட்டை தனியார் கல்லுாரி நிர்வாக மேலாளர் பாசில் என்பவருக்கு ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு முதற்கட்டமாக ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். அதன் பின் கூடுதல் பணம் கேட்டதால் அந்த விற்பனை நின்றுபோயுள்ளது. இந்நிலையில், நிகிதா அந்த வீட்டை மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.50 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். ஆனால் பாசிலின் பணத்தை நிகிதா திரும்பி தரவில்லை.

மேலும் இவரிடம் மதுரை செக்கானுாரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் அரசு வேலைக்காக ரூ.25 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ள வழக்கும் உள்ளது. இதே போல் திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் மேலும் இரண்டு வழக்குகள் நிகிதா மீது உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us