Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ADDED : ஜன 16, 2024 09:14 PM


Google News
Latest Tamil News
ஜனவரி 17, 1917

இலங்கையின் கண்டிக்கு அருகில் உள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில், மருதுார் கோபால மேனன் - சத்தியபாமா தம்பதிக்கு மகனாக, 1917ல் இதே நாளில் பிறந்தவர், எம்.ஜி.ராமச்சந்திரன்.

இவரது தந்தை கோபால மேனன் மறைவுக்கு பின், தாயுடன் கேரளா சென்று, குடும்ப சொத்தில் பங்கு கிடைக்காமல் கும்பகோணம் வந்தனர். வறுமையால் படிக்க முடியாமல், இவரும் அண்ணன் சக்கரபாணியும் நாடகங்களில் நடித்தனர். எம்.ஜி.ஆர்., தன் அயரா உழைப்பால் திரைப்பட நடிகராகி, 'ராஜகுமாரி' படத்துக்கு பின் முன்னணி நாயகனாக வளர்ந்தார்.

தொடர்ந்து, 25 ஆண்டுகள் திரையுலகை ஆண்டவர், தி.மு.க.,வில் இணைந்து, பொருளாளராக வளர்ந்தார். அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால், 1972ல் அ.தி.மு.க.,வை துவங்கி, 1977, சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி, தமிழக முதல்வரானார்.

தொடர்ந்து, 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். சத்துணவு திட்டம், இலவச சீருடை திட்டத்துடன், தஞ்சை தமிழ் பல்கலையை துவக்கிய இவர், 'பாரத ரத்னா' உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றார். 1987, டிசம்பர் 24ல் தன் 70வது வயதில் மறைந்தார்.

'பொன்மன செம்மல்' பிறந்த தினம் இன்று!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us