ADDED : பிப் 24, 2024 09:36 PM

பிப்ரவரி 25, 1915
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, சபாபதி சின்னத்தம்பி பிள்ளையின் மகனாக, 1915ல் இதே நாளில் பிறந்தவர் எஸ்.ராஜரத்தினம்.
இவரது தந்தை, குடும்பத்துடன் மலாய் சென்று, அங்குள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்தார். இவர் அங்குள்ள கல்வி நிலையங்களில் படித்தார்.
பின், லண்டன் சென்று சட்டம் படித்த போது, பிரிட்டிஷாரின் ஆதிக்க உணர்வுகளை அறிந்தார். மலாய் வந்து, மலாயன் டிரிப்யூனலில் பணியாற்றினார். 'சிங்கப்பூர் ஸ்டாண்டர்டு' பத்திரிகையின் ஆசிரியராகி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக எழுதி விடுதலை உணர்வை ஊட்டினார்.
மலாயன் கருத்தரங்கம் நடத்திய டேவிட் மார்ஷல், வழக்கறிஞராக இருந்த லீ குவான் யூ, சமத் இஸ்மாயில், தேவன் உள்ளிட்டோருடன் இணைந்து போராடியதுடன், 'மக்கள் செயல் கட்சி'யை துவக்கினார். சிங்கப்பூரை தனி நாடாக்கி, லீ குவான் யூவை பிரதமராக்கினார். இவரும் வெளியுறவு, கலாசாரத் துறை அமைச்சராகி சிங்கப்பூரை வளர்ந்த நாடாக்கிய இவர், 2006, பிப்ரவரி 22ல், தன், 91வது வயதில் மறைந்தார்.
சிங்கப்பூரை செதுக்கிய தமிழர் பிறந்த தினம் இன்று!