ADDED : பிப் 02, 2024 03:34 AM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே தனியார் பைனான்ஸ் கம்பெனியினர் வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியதால் மனமுடைந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ். 40; இவர், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தார். கடன் தொகையை கட்டாததால், பைனானஸ் நிறுவனத்தினர் அவரது வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர்.
இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் நேற்று மதுபோதையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


