Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஒரு லிட்டர் நீர் சுத்திகரிக்க 1.8 பைசா மட்டுமே

ஒரு லிட்டர் நீர் சுத்திகரிக்க 1.8 பைசா மட்டுமே

ஒரு லிட்டர் நீர் சுத்திகரிக்க 1.8 பைசா மட்டுமே

ஒரு லிட்டர் நீர் சுத்திகரிக்க 1.8 பைசா மட்டுமே

ADDED : பிப் 11, 2024 01:43 AM


Google News
நம் நாட்டில் நாள்தோறும் 6.2 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது.சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற சில நாடுகள் கழிவுநீரை குடிநீர் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கின்றன; மையப்படுத்தப்பட்ட அமைப்புகள் மூலம், உப்பு நீக்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அதிக செலவுகள் காரணமாக குடிநீர் விலை கூடியதாக மாறுகிறது.

சுத்திகரிப்பு ஆலைகள்


'அப்சல்யூட் வாட்டர்' என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தினர் கழிவுநீரை, சுத்தமான குடிநீராக மாற்றுகின்றனர். இவர்கள் 1 கே.எல்.டி., முதல் 2 எம்.எல்.டி., வரை திறன் கொண்ட 100 சதவீதம் பசுமைக் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை வடிவமைத்து, நிறுவுவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் வைத்திருப்பதற்காக, உயிரி வேதிப்பொருட்கள் மற்றும் வினையூக்கிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆலைகளின் முழு செயல்பாடுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரசாயனப்பொருட்கள் பயன்பாடு இல்லை,; சேறும் உற்பத்தியாகாது.

இந்த தொழில்நுட்பம் முழுமையானது; நிலைத்து நிற்கக்கூடியது. தண்ணீரை 85 சதவீதம் குடிநீரின் தரத்திற்கு சுத்திகரிக்க முடியும். நிராகரிக்கப்பட்ட நீரில் 15 சதவீதம் வளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன; திரவ உரமாக பயன்படுத்தப்படுகிறது; வறட்சி பகுதிகளில் உபயோகிக்க பயனுள்ளதாக இருக்கும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது


குடிநீருக்கு, 85 சதவீதம் மாற்றம்; மீதம் 15 சதவீதம் நிராகரிப்பு என்பது உயர்தர திரவ உரமாக மாறுகிறது; பாக்டீரியா, வைரஸ், நோய்க்கிருமிகளை நீக்குகிறது. சோலார் ஆற்றல் பயன்பாட்டால் 24 மணி நேரமும் வேலை செய்ய முடியும். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது. மின்சாரம் ஒரு தடையாக இருக்காது. முதலீட்டில் அதிக வருமானம்; குறைந்த செலவுகள். ஒரு லிட்டர் நீர் சுத்திகரிக்க 1.8 பைசா மட்டுமே செலவாகிறது.

மூன்று நிலை வடிகட்டுதல்


இறுதி நிலைப்பயன்பாட்டை பொறுத்து, நீரில் மூன்று நிலை வடிகட்டுதல் உள்ளது:

நிலை 1: வேளாண்மை/தோட்டக்கலை/நிலத்தடி நீர், நதிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றில் உபயோகம்.

நிலை 2: கழிப்பறை, கூலிங் டவர் மறுசுழற்சி, துணி சலவை ஆகியவற்றில் உபயோகம்.

நிலை 3: சிறப்பு தனிப்பயனாக்கப்பட்ட ஜவ்வு, சுத்தமான குடிநீராக்குகிறது. தற்போது குடியிருப்பு சங்கங்கள், நிறுவனங்கள், ஹோட்டல் ஆகியவற்றில் சாத்தியமான பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது.

மேலும் விபரங்களுக்கு: www.abosolutewater.in

சந்தேகங்களுக்கு எழுதுங்கள்: இ-மெயில் Sethuraman.sathappan@gmail.com

அலைபேசி: 9820451259

இணையதளம்: www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us