'ஆன்லைன்' விசாரணை தகவல் ஆணையம் ஏற்பாடு
'ஆன்லைன்' விசாரணை தகவல் ஆணையம் ஏற்பாடு
'ஆன்லைன்' விசாரணை தகவல் ஆணையம் ஏற்பாடு
ADDED : பிப் 10, 2024 07:39 PM
சென்னை:'தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தவர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக விசாரணைக்கு ஆஜராவது அல்லது நேரடியாக ஆஜராவது குறித்து, தங்கள் விருப்பத்தை, வரும் 29ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்' என, ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, tnsic.gov.in என்ற இணையதளத்தில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தகவல் ஆணையத்தில், இனி வரும் காலங்களில், இரண்டாம் மேல்முறையீடு மனுக்கள், புகார் மனுக்கள், ஆணை நிறைவேற்றப்படாத மனுக்கள் ஆகியவற்றின் மீது, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக அல்லது நேரடியாக விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளில் மேல்முறையீடு செய்துள்ளவர்கள், தகவல் ஆணையம் இணையதளத்திற்கு சென்று, தங்கள் வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக அல்லது நேரடியாக ஆஜராவது குறித்து, தங்களுடைய விருப்பத்தை, வரும் 29ம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யாதவர்கள் மனுக்கள் மீது, நேரடி விசாரணை நடத்த, ஆணையத்தால் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.