மா.செ.,க்களுடன் 24, 25ல் பழனிசாமி ஆலோசனை
மா.செ.,க்களுடன் 24, 25ல் பழனிசாமி ஆலோசனை
மா.செ.,க்களுடன் 24, 25ல் பழனிசாமி ஆலோசனை
ADDED : ஜூன் 20, 2025 06:45 AM
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், வரும் 24, ௨5 தேதிகளில், அக்கட்சியின் மாவட்டச் செயலர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது.
இரண்டு நாட்களும் காலை, மாலை என நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் கட்சி ரீதியான 82 மாவட்டச் செயலர்கள், 82 மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆலோசனை கூட்டத்தில் 'பூத்' கமிட்டிகள் அமைக்கும் பணிகளை, 100 சதவீதம் முடிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, வரும் 24, 25ம் தேதிகளில் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.