தி.மு.க.,விற்கு மரண அடி மக்கள் தயார்: பழனிசாமி
தி.மு.க.,விற்கு மரண அடி மக்கள் தயார்: பழனிசாமி
தி.மு.க.,விற்கு மரண அடி மக்கள் தயார்: பழனிசாமி
ADDED : ஜன 29, 2024 05:37 AM
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பழனிசாமி பேசியதாவது:
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு, அ.தி.மு.க., அரசால் நிதி ஒதுக்கப்பட்டன. பின், பணிகள் நடந்தன.
தற்போது காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம், அம்மா மினி கிளினிக், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 'லேப்டாப்' போன்ற பல திட்டங்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க., அரசால் முடக்கப்பட்டுள்ளன.
மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்படும். வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,விற்கு மரண அடி கொடுக்க வேண்டும். அதற்கு மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.


